முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்க
பாலாக்க்ஷிதா இன்டர்நேஷனல் அகாடமி முகப்பு
பாலாக்க்ஷிதா இன்டர்நேஷனல் அகாடமி முகப்பு

கேள்வி பதில்கள்

பெற்றோர் அடிக்கடி கேட்கும் கேள்விகள்

உங்கள் கேள்விக்கான பதில் இங்கே இல்லையா? WhatsApp அல்லது மின்னஞ்சல் அனுப்புங்கள். 24 மணி நேரத்திற்குள் பதிலளிக்கிறோம்.

தொடங்குவது எப்படி

எந்த வயதில் குழந்தை தொடங்கலாம்?

தற்போது பெரும்பாலான பாடத்திட்டங்கள் 5 முதல் 16 வயதுக் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏற்ற தொடக்க நிலை, பாடத்திட்டம், குழந்தையின் தேவையைப் பொறுத்தது.

முழுமையான தொடக்கநிலை மாணவர் சேரலாமா?

ஆம். தொடக்கநிலை வகுப்புகள் அடிப்படையிலிருந்து தொடங்குகின்றன. தமிழ் பேசுதல் தொடக்கநிலைக்கு முன் தமிழ் அறிவு தேவையில்லை.

தமிழைப் புரிந்துகொண்டு பேசத் தயங்கும் குழந்தை சேரலாமா?

ஆம். உரையாடல், சொற்களஞ்சியம், உச்சரிப்பு, வழிகாட்டிய பேச்சுப் பயிற்சிகள் தமிழைப் பயன்படுத்தும் தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

இலவச அறிமுக வகுப்பில் என்ன நடக்கும்?

அறிமுக வகுப்பு இலவசம், 40 நிமிடங்கள் நடைபெறும். உங்கள் குடும்பத்திற்கு வசதியான நேரத்தில், தனிப்பட்ட முறையிலோ சிறிய குழுவிலோ நடத்தப்படும். உங்கள் குழந்தையின் தொடக்க நிலையை அறிந்து, வகுப்புகள் நடைபெறும் விதத்தை விளக்கி, ஏற்ற பாடத்திட்டத்தைப் பரிந்துரைக்கிறோம்.

பெரியவர்களுக்கும் வகுப்புகள் உண்டா?

ஆம். பெரியவர்களின் ஆர்வம், கற்றல் தேவைகளுக்கு ஏற்பத் தமிழ், சமஸ்கிருதம், ஸ்லோகங்கள், தொடர்புத்திறன், பண்பாட்டுக் கல்வி உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்புகளையும் வழங்குகிறோம்.

சேர்க்கை எவ்வாறு நடைபெறும்?

அறிமுக வகுப்பைப் பதிவு செய்யுங்கள் அல்லது WhatsApp, தொலைபேசி, மின்னஞ்சல் வழியே தொடர்புகொள்ளுங்கள். மாணவரின் தேவையை அறிந்த பிறகு ஏற்ற பாடத்திட்டம், அட்டவணை, கட்டணம் பரிந்துரைக்கப்படும்.

வகுப்புகள் நடைபெறும் விதம்

வகுப்புகள் நேரடியா, பதிவு செய்யப்பட்டதா?

வகுப்புகள் ஆசிரியர் வழிகாட்டுதலுடன் நேரடியாக நடைபெறும். தேவைக்கும் அனுமதிக்கும் ஏற்பச் சில வகுப்புகள் மீள்பார்வைக்காகப் பதிவு செய்யப்படலாம். பதிவின் அணுகல், கிடைக்கும் காலம் பாடத்திட்டத்தைப் பொறுத்தது.

தனிப்பட்ட வகுப்பா, குழு வகுப்பா?

பாடத்திட்டம், அட்டவணைக்கு ஏற்பத் தனிப்பட்ட, சிறிய குழு முறைகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு வகுப்பும் எவ்வளவு நேரம்? வாரத்திற்கு எத்தனை வகுப்புகள்?

பாடத்திட்டம், மாணவர்களின் வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு வகுப்பும் பொதுவாக 45 முதல் 60 நிமிடங்கள் நடைபெறும். பாடத்திட்டம், மாணவரின் தேவைக்கு ஏற்ப வாரத்திற்கு 1 முதல் 3 வகுப்புகள் வரை நடத்தப்படும்.

ஒரு குழுவில் எத்தனை மாணவர்கள்?

மாணவர்கள் பங்கேற்று, கவனம் பெறும் வகையில் குழுக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. சரியான எண்ணிக்கை பாடத்திட்டத்தைப் பொறுத்தது. சேர்க்கைக்கு முன் உறுதிப்படுத்தப்படும்.

இணையவழி வகுப்பிற்கு எந்த சாதனம் தேவை?

நிலையான இணைய இணைப்புடன் மொபைல், டேப்லெட் அல்லது லேப்டாப் தேவை. வாசிப்பு, எழுத்துப் பயிற்சிக்குப் பெரிய திரை பரிந்துரைக்கப்படுகிறது. Zoom அல்லது Google Meet வழியே வகுப்புகள் நடைபெறும். தளம், இணைய இணைப்பு விவரம் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.

பெற்றோர் குழந்தையுடன் அமர வேண்டுமா?

பொதுவாகத் தேவையில்லை. சிறுவயது மாணவர்களுக்கு வகுப்பில் இணைய ஆரம்ப உதவி தேவைப்படலாம். பயிற்சி, வீட்டுப்பாடத்தை ஊக்குவிப்பது வரவேற்கப்படுகிறது.

வகுப்பு நேரத்தை மாற்ற முடியுமா?

வெவ்வேறு நேர மண்டலங்களுக்கு ஏற்ற நெகிழ்வான நேரம் வழங்க முயற்சிக்கப்படுகிறது. மாற்றம், ஆசிரியர், குழு நேரம் கிடைப்பதைப் பொறுத்தது.

ஒரு வகுப்பைத் தவறவிட்டால் என்ன செய்வது?

கிடைக்கக்கூடிய பட்சத்தில் வகுப்புப் பதிவும் கற்றல் வளங்களும் வழங்கப்படும், அல்லது வாய்ப்புள்ளபோது மாற்று வகுப்பு ஏற்பாடு செய்யப்படும். ஏதேனும் சந்தேகம் இருந்தால் பெற்றோர் ஆசிரியரைத் தொடர்புகொள்ளலாம். உங்கள் பாடத்திட்டத்திற்கான ஏற்பாட்டைச் சேர்க்கைக்கு முன் உறுதிப்படுத்துங்கள்.

கற்றலும் முன்னேற்றமும்

புத்தகங்கள், பயிற்சித்தாள்கள் வழங்கப்படுமா?

வகுப்புக்குத் தேவையான புத்தகங்கள், செயல்பாட்டுத் தாள்கள், பயிற்சித்தாள்கள் அல்லது கல்வி வீடியோ கிளிப்புகள் வழங்கப்படும். கூடுதல் பொருள் தேவைப்பட்டால் முன்கூட்டியே தெரிவிக்கப்படும்.

வீட்டுப்பாடம் வழங்கப்படுமா?

தேவைக்கேற்ப வழங்கப்படும். குழந்தையின் வயது, கற்றல் நிலைக்கு ஏற்ற பயிற்சிகள், தேவையற்ற அழுத்தமின்றி வகுப்பில் கற்றதை வலுப்படுத்தும் வகையில் இருக்கும்.

முன்னேற்றம் எவ்வாறு மதிப்பிடப்படும்?

வகுப்புப் பங்கேற்பு, செயல்பாடுகள், பயிற்சித்தாள்கள், வாசிப்பு, எழுத்து, பேச்சு, தொடர்ச்சியான பயிற்சி ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு மாதமும் முன்னேற்றம் மதிப்பிடப்படுகிறது. பெற்றோருக்கு WhatsApp வழியே தகவலும் பரிந்துரைகளும் வழங்கப்படும்.

வகுப்புப் பதிவுகள் கிடைக்குமா?

ஆம். கற்றல், மீள்பார்வைக்காக வகுப்புகள் பதிவு செய்யப்படலாம். இந்தப் பதிவுகள் தனிப்பட்ட கல்விப் பயன்பாட்டிற்காக, வகுப்பில் சேர்ந்த மாணவர் அல்லது பெற்றோருடன் மட்டுமே பகிரப்படும். பதிவுகள் கிடைக்கும் கால அளவு பாடத்திட்டத்தைப் பொறுத்தது.

சான்றிதழ் வழங்கப்படுமா?

தகுதியான பாடத்திட்டங்களுக்கு உரிய விதிமுறைகளை நிறைவு செய்த பின் சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டணமும் தனியுரிமையும்

கட்டணம் எவ்வாறு செலுத்துவது?

Google Pay, எந்தவொரு UPI செயலி, வங்கிப் பரிமாற்றம் மூலமும், இந்தியாவுக்கு வெளியே உள்ள குடும்பங்கள் PayPal மூலமும் கட்டணம் செலுத்தலாம். பணம் செலுத்தும் முன் பாடத்திட்டம், கட்டணத்தைக் கல்வியகத்துடன் உறுதி செய்து, பிறகு கட்டண உறுதிப்படுத்தலை WhatsApp மூலம் அனுப்புங்கள். முழு விவரங்களும் ‘கட்டணம், செலுத்தும் முறை’ பக்கத்தில் உள்ளன.

குழந்தையின் தனியுரிமை எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது?

மாணவர் தகவல்கள் கல்வி, தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பெயர், புகைப்படம், வீடியோ, குரல், படைப்பு அல்லது கருத்து பெற்றோர் அல்லது பாதுகாவலர் அனுமதியுடன் மட்டுமே வெளியிடப்படும். விவரங்களுக்குக் கல்வியகத்தின் தனியுரிமை, ஊடக அறிவிப்பைப் படியுங்கள்.

முதலில் ஒரு உரையாடல். முடிவு பிறகு.

இலவச 40 நிமிட அறிமுக வகுப்புடன் உங்கள் குழந்தையின் பயணத்தைத் தொடங்குங்கள்.